சென்னை: 
பாலீசுவரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது.
இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  வழிகாட்டுதலின்படி, சென்னை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை நவீன ரோவர் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணியினை இன்று தொடங்கி வைத்தோம்.
இதன் மூலம் எளிய முறையில் வரைபடங்களைத் தயாரிக்கலாம். ஆக்கிரமிப்பு மற்றும் காணாமல் போன புல எல்லைக் கற்களை எளிதில் கண்டறியலாம். நவீன கருவிகள் கொண்டு துல்லியமாக அளப்பதன் மூலம் திருக்கோயில்களுக்கு வருவாய் அதிகப்படுத்தலாம். இந்நிகழ்வில் ஆணையாளர் குமரகுருபரன், மலைவேலு சட்டமன்ற உறுப்பினர். ஆகியோர் உடனிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.