சென்னை: சென்னை கடற்கரையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் சிலைகளை கரைக்க போதுமான வசதிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை  மெரினா கடற்கரையில்  இருந்து  700 டன்  விநாயர்கள் சிலைகளின் துண்டுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 18ந்தி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடிய நிலையில்,  விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாட்டு செய்யப்பட்டது.    சென்னையில் மட்டும்  1,519 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுபோல, தாம்பரத்தில் 425 சிலைகள், ஆவடியில் 204 சிலைகள் என மொத்தம் 2,148 சிலைகள்  பொதுஇடங்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சிலைகளை கடலில் கரைக்கும் பணி காவல்துறை அறிவிப்பின்படி,  கடந்த 23, 24ந்தேதிகளில் நடைபெற்றது. அதன்படி, சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் ஆகிய 4 கடற்கரைகளில்  விநாயகர் சிலை கரைக்க  அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் 1,948 விநாயகா் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை, பூ, வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் உள்பட இதர கழிவுகள் கடற்கரைகளில் போடப்பட்டது. இந்த கழிவுகள் கடலுக்குள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்குள் இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 70 டன் கழிவுகளை மெரினா கடற்கரையில் இருந்து மட்டும் அகற்றியுள்ளனர்.

இதற்கிடையில் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், கிரேன் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால் சிலைகளை கரைக்காமலேயே அதை உடைத்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கடலில் கரையால் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை கரைக்கும் பணிகளிலும், அதை அகற்றும் பணியிலும்  சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தவர், இதுவரை 700 டன் அகற்றப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.