நெட்டிசன் பகுதி:
Ganesh Anbu அவர்களின் முகநூல் பதிவு:

மதிப்புமிக்க மண் பிள்ளையாரை விட்டு மானம்கெட்ட ரசாயன பிள்ளையாரை வணங்கும் மடத் தமிழனை என்ன சொல்வது !
பெரிய கோவில் வேண்டாம் ஆடம்பரம் வேண்டாம் ஆல மரத்தடி என்றாலும் சரி, ஆற்றங்கரை என்றாலும் சரி, மண்ணை கைபிடித்து வைத்தாலும் சரி, சாணியை பிடித்து வைத்தாலும் சரி அங்கே நான் இருப்பேன் என்று மிகவும் எளிமையாக நடந்த பிள்ளையார் வழிபாடு இன்று ரசாயனம் பூசிய பிளாஸ்டர்  ஆப் பாரிஸ் விநாயகரை செய்து மூலைக்கு மூலை வைத்து நம் பண திமிரை, மத வெறியை காட்ட விநாயகரை வீதியில் விட்டு பெருமை பட்டு பழமையான பிள்ளையார் வழிபாட்டை அசிங்க படுத்திகொண்டு இருக்கிறோம்,
o
அது மட்டுமா இயற்கையை காக்கவே ஊரில் கோவில் குளம் கற்பக விருட்சம் என்று மரம் நீரை காக்க நாம் தொடங்கிய வழிபாட்டு முறைகளை இன்று பிளாஸ்டர் ஒப் பாரிஸ் புள்ளையார் செய்து ரசாயன பூச்சு அடித்து ஆற்றில் இறக்கி நீரை மாசாக்கி பக்தியை காட்டுகிறேன் என்று உங்கள் பகட்டை காட்டுவது பக்தியும் அல்ல இது போன்ற மாசுபடுத்தும் புள்ளையார் நம்மை ஆசிர்வதிக்க உருவாக்கப்பட்டவரும் அல்ல.
அந்த பிள்ளையாரும் சபிக்கபட்டவர்தான் அவர் நமக்கு வழகுவதும் சாபம் தான்!