பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை

Must read

க்னோ

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பொது இடங்களில் பிரம்மாண்டமான சிலைகளை வைத்து பூஜை செய்து ஏராளமானோர் வழிபடுவது வழக்கமாகும்.   சமீப காலமாக இதே பாணியில் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடுவது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடத் தடை விதித்துள்ளது.  இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடத் தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

More articles

Latest article