காந்தியும் மோடியும் எதிர் எதிர் துருவங்கள் : காந்தி ஆசிரம தாளாளர்

Must read

வார்தா

தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மோடி வார்தாவில் உள்ள சேவாகிராம ஆசிரமம் செல்லாததை ஆசிரம் தாளாளர் கண்டித்துள்ளார்.

கடந்த 1936 ஆம் வருடம் மகாத்மா காந்தி வார்தா அருகில் உள்ள சேகாவ் என்னும் சிற்றூரில் தான் தங்க ஆசிரமம் ஒன்றை அமைத்தார். அந்த ஊர் அதன் பிறகு சேவாகிராமம் என வழங்கப்பட்டு வருகிறது. சேவாகிராமம் என்றால் சேவை புரியும் சிற்றூர் என பொருளாகும். இந்த பகுதியில் நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார்.

ஆனால் அவர் காந்தி ஆசிரமத்துக்கு செல்லவில்லை. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெர்வித்துள்ளனர். காந்தி ஆசிரமத்தை நடத்தி வரும் தாளாளர் அவினாஷ் காக்டே, “கடந்த ஐந்து வருடங்களில் மோடி தாம் காந்தியை விட பெரியவர் ஆகி விட்டதால் தமக்கு இனி காந்தி தேவை இல்லை என நினைத்திருக்கலாம். காந்தி எப்போதும் உண்மையை பேசுவார்.

ஆனால் மோடி அரசு பதவி ஏற்கும் முன்பிருந்தே தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். அதனால் அவர் காந்தியை விட தாம் உயர்ந்தவர் என நினைத்துக் கொண்டுள்ளார்.

காந்தியும் மோடியும் பல விதத்தில் எதிர் எதிர் துருவங்களாக உள்ளனர்.

காந்தி அனைவரையும் சமமாக நினைத்தார். ஆனால் மோடி தொழிலதிபர்களுக்கு ஆசி அளித்து பயன் பெறுகிறார்.  காந்தி தன்னால் ஏதும் கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பார். ஆனால் கடந்த 2002 ஆம் வருடம் கோத்ரா சம்பவத்துக்கு பிறகு நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதற்கு மோடி பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டார்.

கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் நேரத்தில் மோடி இங்கு வந்து ஆசி பெற்று சென்றார். அப்போது அவர் காந்தியிடம் தமது அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு பெற்றிருக்கலாம். அன்று இருந்த மோடி இந்த ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் முழுமையாக மாறி உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article