மும்பை:

வரி ஏய்ப்பு வழக்கில் ‘கேட்ஜெட்ஸ் குரு’ இயக்குனர் ராஜ்பால் சிங் கைது செய்யப்பட்டார். சேவை வரி மற்றும் ஜிஎஸ்டி என ரூ. 8 கோடிக்கு மேல் செலுத்தாத காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான கேட்ஜெட்ஸ் குரு, சிங்கப்பூரில் உள்ள ஆரக்கிள் டெலி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. சென்னை மற்றும் புனேயில் அலுவலகங்கள் உள்ளது.

2013ம் ஆண்டில் தான் வரி செலுத்தாதவர்களை கைது செய்யும் அதிகாரிம் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு கைது செய்யும் அதிகாரம் கிடையாது. 2016ம் ஆண்டில் கைது செய்வதற்கான வரி ஏய்ப்பு தொகையை நூறு சதவீதம், அதாவது ரூ. 2 கோடியாக மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]