டில்லி:

ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

2106ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் மிச்சமாகியுள்ளது. அதோடு உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடைய உதவும். இதர துறைகள் பங்களிப்பை வழங்காத நிலையில் ஜியோ உதவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருகிராமில் உள்ள இந்தியன் யூனிட் ஆப் தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டேட்டர்ஜி மற்றும் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் உள்ள காம்பட்டீவ்னஸ் மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.

ரூ.152 என்ற நிலையில் இருந்த ஒரு ஜிபி இன்டெர்நெட் பயன்பாட்டை ரூ.10க்கு ஜியோ கொண்டு வந்தது. வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்பு வசதியை அறிமுகம் செய்தது. இது இந்த துறையில் உள்ள இதர நிறுவனங்களின் 75 சதவீத வருவாயை இழக்க நேரிட்டது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்டர்நெட் பொருளாதாரம் மட்டுமின்றி தொலைத்தொடர்பு சார்ந்த இதர பல விஷயங்களும் முன்னேற்றம் கண்டது. 2017 இறுதியில் ஒரு ஜியோ வாடிக்கையாளரின் சராசரி இன்டர்நெட் பயன்பாடு 10 ஜிபி.யாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.