டெல்லி: ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ள இந்தியா, அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துகிறது. இந்திய தலைமையின் கீழ் நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இதுவாகும். இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அதில் ஜி20தலைமை பொறுப்பேற்றதறகான அறிவிப்பும் வைக்கப்பட்டு உள்ளது..
இதைடுத்து, ஜி 20 மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்தியஅரசு கூட்டி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லி செல்கிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.