சென்னை: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது நினைவு தினத்தை யொட்டி,  தெலுங்கானா கவர்னர் தமிழிசை டிவிட் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான  மறைந்த .ஜெ.ஜெயலலிதாவின் 6வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்தக்கு தெலங்கானா கவர்ன தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

இதுருகுறித்து,  தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை… துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.