வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது.

உண்மையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வரிப்பணம் செலுத்துபவர்களாக உள்ளனர்.

2019 – 20 நிதியாண்டில் 6.47 கோடி பேர் ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்தனர். இதில் 45 சதவீதம் பேரின் வருமானம் வரி வரம்புக்குள் இல்லை. அதாவது 2020 நிதியாண்டில் 3.57 கோடி பேர் வரி செலுத்தியுள்ளனர்.

இதற்கு அடுத்த 2020-21, 2021-22 நிதியாண்டுகளில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் மற்றும் வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில் அதற்கு கொரோனா காலத்தில் வருமானம் குறைந்ததாக காரணம் கூறப்பட்டது.

இந்த நிலையில் 2022-23 நிதியாண்டில் 7.4 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்த நிலையில் 2.23 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர். 2019-20 நிதியாண்டை ஒப்பிடும் போது சதவீத அடிப்படையில் குறைந்த அளவிலேயே வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும் மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை ஆண்டுக்கு ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறிவருவது வேடிக்கையாக உள்ளதாக தரவு ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.