டெல்லி: ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்., அப்போது 3 ‘கடமைகளை’ கோடிட்டுக் காட்டினார்.
பட்ஜெட்டின் கட்டமைப்பு குறித்து விளக்கிய அவர், இது மூன்று “கடமைகளால்” ஈர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்: அவை,
1) “உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது மற்றும் நிலைநிறுத்துவது”,
2) “நமது மக்களின் லட்சியங்களை நிறைவேற்றுவது மற்றும் அவர்களின் திறனை வளர்ப்பது”,
3) “ஒவ்வொரு குடும்பம், சமூகம், பிராந்தியம் மற்றும் துறைக்கும் அர்த்தமுள்ள பங்கேற்புக்கான வளங்கள், வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வது” என்பனவாகும்.
2025-ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி எளிமைப்படுத்தல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் அறிவிப்பு மற்றும் கட்டாய தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் “சீர்திருத்தப் பயணம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நாடு முழுவது உள்ள 15 தொல்லியல் இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டு உள்ளது. இதன் படி ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ஒரு “கலாச்சார மையம்” (Experiential Cultural Center) அமைக்கப்பட உள்ளது.
சீனாவை இந்தியா சாா்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பிரத்யேக அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தாா். மின் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அரிய வகை கனிமங்கள் அத்தியாவசியமானவை. இவற்றுக்காக சீனாவை இந்தியா சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திரத்தில் பிரத்யே அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என அமைச்சா் குறிப்பிட்டாா்.
தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா், லோத்தல், தோலாவிரா, ராக்கிகா்கி, சாரநாத், ஹஸ்தினாபுரம் மற்றும் லே அரண்மனை உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்கள் துடிப்பான, அனுபவமிக்க கலாசார இடங்களாக மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அகழ்வாராய்ச்சி பகுதிகள், பிரத்யேக நடைபாதைகள் மூலம் மக்கள் பாா்வையிட திறக்கப்படும்.
பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு உதவவும், ஆழ்ந்த கதை சொல்லும் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் இந்த இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்
மலைப் பாதைகள், ஆமைப் பாதைகள் மற்றும் பறவைகள் கண்காணிப்புப் பாதைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான பிரத்தியேக அரிய கனிம வழித்தடம் (Rare Earth Corridor) அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் ஒடிசா ,கேரளா ,ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிமங்களுக்கான தொழில் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும் மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ் நாட்டின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.. உலகத் தரம் வாய்ந்த மலையேற்ற அனுபவத்தை வழங்கும் நோக்குடன் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீா், கிழக்குத் தொடா்ச்சி மலையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு (ஆந்திர பிரதேசம்) மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள பொதிகை மலை (தமிழ்நாடு – கேரளம்) ஆகிய இடங்களில் சூழலியல் ரீதியாக நிலையான மலைப் பாதைகள் உருவாக்கப்படும்.
அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் துறை நெருக்கடியில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம் மானது ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால், திருப்பூரின் ஒரு ஆடையின் விலை 10 டாலரிலிருந்து 16 டாலராக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட, உற்பத்திச் செலவு குறைக்கப்படுகிறது.

AIக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். AI மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
மருத்துவ சுற்றுலா 5 இடங்களை மையாகக் கொண்டு அமைக்கப்படும்.
ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம். 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தலா ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்.
புதிய வடிமைப்பு துறைக்கான மையம் அமைக்கப்படும்.
இந்தியாவில் டிசைனர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால் அதை சரி செய்வதற்காக இந்த மையம் அமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்.
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்கான கடலோரப் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் அறிவிப்பு.
3 கோடி மக்கள் தேங்காய் உற்பத்தி சார்ந்து இருக்கிறார்கள். உலகத்திலேயே இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதன்மையான நாடாக உள்ளது. இவர்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு.
மும்பை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ABGC content creator lab 15,000 மேல்நிலை பள்ளிகளில், 500 கல்லூரிகளில் அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் கவுரவமான வாழ்க்கைக்கு திட்டங்கள் அறிவிப்பு.
மாற்றுத்திறனாளிகளின் உதவிக்கான உபகரணங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு தொழில் தடம் அறிவிப்பு.
1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி குழு GRANT ஆக அறிவிப்பு.
மாநிலங்களுக்கு வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
புதிய வருமான வரிசட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல்.
விபத்து கால காப்பீடுகள் என்பது வருமான வரி விலக்கை பெறுகிறது.
வருமானவரி தாக்கல் முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் உரைக்கு முன்னதாக, 2026-2031 காலகட்டத்திற்கான மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரி வருவாய் பகிர்வு தொடர்பான 16வது நிதிக் குழுவின் அறிக்கையை சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட நிதிக் குழு, மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரிகளைப் பகிர்வதற்கான ஒரு சூத்திரத்தை வழங்குகிறது.
மத்திய அரசால் விதிக்கப்படும் வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் ஆகியவை பகிர்ந்தளிக்கக்கூடிய நிதிப் பிரிவின் ஒரு பகுதியாக இல்லை.
நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்ட 16வது நிதிக் குழு, டிசம்பர் 31, 2023 அன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]