பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.
இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறியுள்ளதை அடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்த ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு இடங்களுக்கு மாற்றியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஈரானின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என்று ஈரான் தலைவர் கூறியுள்ளார்.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பஹரைனில் உள்ள அமெரிக்க கடற்படை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதல் உடனடியாக நடைபெறும் என்று அவர் கூறியுள்ளதை அடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் துவங்கியுள்ளதாகவும் இதனால் வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் நாடுகளில் வர்த்தகம் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.