Skip to content
  • Wed. Jul 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு…

Jun 22, 2020

சென்னை:

மதுரை மாநகராட்சி பகுதிகளில்  நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்து அறிவித்துள்ள நிலையில், தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில்,   சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை  (19ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.  அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.  இதையடுத்து, அங்கும் பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

மதுரையில் இதுவரை 705 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ந்தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு , மதுரை மேற்கு  மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் நாளை முதல் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் இந்த லாக்டவுன் அமலுக்கு வருகிறது.

Post navigation

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை… தமிழகஅரசு
கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? மதுரை உயர்நீதி மன்றம்…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer