டெல்லி: இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை அணியை இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்ட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த போட்டிகளில் ஆட இலங்கை சென்றுள்ள இந்திய அணியின் ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செய்யப்படவுள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட சில முக்கிய வீரர்கள்  இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் தவான் கேப்டனராக நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு  தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா இலங்கை அணிக்கு இடையே நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 13- ஆம் தேதி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளுமே கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்திலேயே நடைபெறுகிறது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜூலை 16- ஆம் தேதி  மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜூலை 18-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்பிறகு டி20 போட்டிகள் தொடங்குகின்றன.

முதல் போட்டியானது ஜூலை 21 – ஆம் தேதி  இரவு 7.மணிக்கு நடைபெறவுள்ளது.

இரண்டாவது டி 20 போட்டி இரவு 7.மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்றாவது டி 20 போட்டி இரவு 7.மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இந்த இரண்டு அணிகளும் இதுவரை 19 டி 20 போட்டிகள் மோதியதில் இந்திய அணி 13 முறையும், 5 முறை இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி சமமாக முடிந்துள்ளது. அதுபோல இந்தியா மற்றும் இலங்கை இந்த இரண்டு அணிகளும் இதுவரை 165 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியதில், இந்திய அணி 91 முறையும், இலங்கை அணி 56 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் ஆடும் இந்திய வீரர்கள் விவரம் : ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, தேவதூத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷன்ப்ப கௌதம், க்ருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சகரியா