தயிரை ‘தஹி’ என இந்தியில் எழுத வேண்டும் என்ற ஆணைய உணவுப் பாதுகாப்புத் துறை திரும்பப்பெற்றது.
ஆவின் மற்றும் நந்தினி ஆகிய பால் கூட்டுறவு சங்கங்கள் தங்கள் தயாரிப்புகளான தயிர் பாக்கெட் மீது தஹி என்று இந்தியில் குறிப்பிடவேண்டும் என்று கூறியிருந்தது.

தவிர அவற்றின் பெயரை மாநில மொழியில் அடைப்புக் குறிக்குள் எழுத மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியில் எழுத வேண்டும் என்ற உத்தரவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திரும்பப்பெற்றுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel