சென்னை

நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு உயர்கல்வி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லியில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் நடந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவ – மாணவியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை நஜரில்  ஐ.ஐ.டி., லயோலா கல்லூரியைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 27 மாவட்டங்களில் நடக்கிறது. அத்துடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் 25ம் தேதியும், ஜனவரி 1ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.க் தற்போதைய நிலையில் தமிழக அரசு மாணவர்கள் போராட்டத்தை அமைதியாக அடக்க எண்ணியதாக கூறப்படுகிறது.

எனவே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடவும் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2 ஆம் தேதி அதாவது ஜனவரி மாதம் 2 ஆம் தேதி அன்று கல்லூரிகள் மற்றும் பலகலைக் கழகங்கள் மீண்டும் செயல்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.   திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் கடும் போராட்டம் நடத்தி வரும நிலையில்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.