சென்னை

மிழகம் முழுவதும் நாளை முதல் நியாயவிலைக் கடைகள் காலை மற்றும் பிற்பகல் என இரு வேளை இயங்க உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.   அதன்படி 14/06/2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் போது காய்கறிகள், மளிகைக் கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் இன்று தமிழக அரசு புது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நியாயவிலைக் கடைகள் நாளை அதாவது ஜூன் 8 முதல் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இது சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.  இது மறு உத்தரவு வரும் வரையில் நடை முறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொருள் தொகுப்பினை 15/06/2021 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல வசதியாக டோக்கன்களை பிற்பகலில் 11/06/2021 முதல் 14/06/2021 வரை நியாயவிலைக் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]