திருநெல்வேலி
இன்று முதல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே 6 ரயில் நிலைய நடைமேடை உயர்த்தும் பணி தொடங்குகிறது.
திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே உள்ள முக்கியமான 6 ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணி ஏற்கனவே முன்மொழியப்பட்டு இருந்தது. இன்று முதல் இந்த பணி தொடங்கப்படும் எனவும், தொடக்கமாக காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடை உயர்த்தப்படும் எனவும் தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்லை -திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களான பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள தாழ்மட்ட நடைமேடை எண் ஒன்றை உயர்மட்ட நடைமேடையாக உயர்த்தவும், செய்துங்கநல்லூர் நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2 ஐ உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காயல்பட்டினம் ரெயில் நிலையத்தின் நடைமேடை உயர்த்தும் பணிக்காக எந்திரங்களை பயன்படுத்தி சமாளிப்பு பலகை மற்றும் சுவர் அகற்றும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.