சென்னை

ன்று முதல் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  இதனால் சென்ற வருடம் மற்றும் இந்த வருடம் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொண்டு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆண்டு தேர்வுக்கான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.  அவ்வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்தது.

இவ்வாறு 10 ஆம் வகுப்பு அளிக்கப்பட்ட மதிப்பெண்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.  இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்படுகிறது.  பெற்றோர் அல்லது மாணவர் நேரில் சென்று சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

[youtube-feed feed=1]