சென்னை

மிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளத், இன்று தொடங்கும் மனுத்தக்காலுக்கு மார்ச் 27 ஆம் தேதி கடைசி நாளாகும். 28 ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர், டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் பெடாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, படிவம் 26 முழுமையாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும். வேட்புமனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை வழங்க வேண்டும். புகைப்படத்தில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது. 

இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவர், வேட்பாளர் வேட்புமனு செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது வேட்பாளர் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும். 

நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குச் செல்ல அனுமதி உண்டு. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.