ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் செல்ல இன்று முதல் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோவில், ராமர் பாதம், ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில், தனுஷ்கோடி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம், அப்துல் கலாம் வீடு உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன.

ராமேஸ்வரத்திற்குப் பேருந்துகளில் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்தில் இருந்து வாடகைக்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலமே இந்த சுற்றுலா இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று  முதல் குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் சேவையும் தொடங்கப்படுகிறது.

இந்த சிறப்பு பேருந்து திட்டத்தை இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன், மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர். காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைகக உள்ளனர்.