சென்னை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 16,678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் வாசிகள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல வசதியாகத் தமிழக அரசு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்குகிறது அதன்படி சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே கே நகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து 13 ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் வழக்கமான தினசரி 2100 பேருந்துகள், 4000 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களில் 10,300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவற்றின் இயக்கம் குறித்துத் தெரிந்து கொள்ள மற்றும் புகார்களை அளிக்க 64450 14450. 94450 14436 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பொங்கலையொட்டி ஏராளமான ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதையொட்டி போக்குவரத்துத்துறை, “ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 மற்றும் 04424749002 ஆகிய கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம்” என அறிவித்துள்ளது.