டில்லி

இன்று முதல் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வூகான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.   பிறகு அது உலகெங்கும் வேகமாக பரவி மக்களைக் கடுமையாக அச்சுறுத்தியது.  அதையொட்டி அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதலில் 60 வயதை தாண்டியோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.   பிறகு அந்தப்பணி சிறிது சிறிதாக விரிவாக்கப்பட்டு 18 வயதை தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.   பிறகு 15- 18 வயதை தாண்டியவர்களுக்கு கோவாக்சின் த்டுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது மத்திய அரசு 12-14 வயதாகும் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது.  அதன்படி இன்று முதல் நாடெங்கும் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தபட உள்ளது.  இதில் தமிழகத்தில் சுமார் 10 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.