தாய்மார்களே கவனம்…..

தங்களது குழந்தைகளை தரையில் கிடத்தும்போது, ஏதேனும் பூச்சிகள் உள்ளதா என்பதை ஆராய்ந்துவிட்டு கிடத்துங்கள்….

மேலும், குழந்தை கிடத்தும் துணி அல்லது மெத்தையை நன்கு உதறிவிட்டு கிடத்துங்கள்.. ஏனென்றால் தரையில் நமக்கு தெரியாமல் செல்லும் புழு பூச்சிகள் குழந்தையின் காதுக்ளுக்குள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக குழந்தைகள் தொடர்ந்து அழ ஆரம்பிக்கும்… நாம் காரணம் தெரியாமல் குழம்புவோம்… மருத்துவரை பார்ப்போம்… இறுதியில்தான் காதில் ஏதேனும் பிரச்சினை இருக்குமோ…. அல்லது காதில் எறும்பு ஏதும் புகுந்துவிட்டதோ என எண்ணி ஈஎன்டி மருத்துவரை தேடி அலைவோம்…

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பாட்டி வைத்தியம் எனப்படும் கிராமத்து வைத்தியம் சற்றே வித்தியாசமானது.

ஏனென்னறால் கிராமங்களில் குடிசை வீட்டில் வசிப்பவர்கள் தங்களது குழந்தைகளை பொதுவாக தரையிலே ஒரு துணியைவிரித்து படுக்க வைப்பார்கள். அதன் காரணமாக ஓலைகளில் இருந்து பூச்சிகள் தரையில் விழுந்து குழந்தையை கடிப்பதோ அல்லது குழந்தையின் காதுகளுக்குள் சென்றுவிடுவதோ உண்டு…

அதன் காரணமாக தொடர்ந்து அழும் குழந்தைகளுக்கு உடனடியாக தீர்வு ‘பாட்டி வைத்தியம்’ம்தான்.

அழும் குழந்தையின் காதில் எண்ணையை விட்டால், குழந்தையின் காதில் ஏதேனும் புழு, பூச்சிகள் புகுந்திருந்தால் உடனடியாக வெளியேறி விடும்…

அதுபோன்ற வீடியோதான்  இங்கே… உங்கள் கவனத்திற்கு….

https://youtu.be/kk-M2RfcX3U