சென்னை
வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் தரவிறக்கம் செய்யலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தற்போது www.dge.tn.gov.in-இல் பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவிட்டு10ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23 முதல் 31 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]