கீழடி: அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த  முத்திரையானது தேங்காய் ஓட்டுடன் சுடுமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது.  இந்த அகழாய்வுப் பணி கீழடி, மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், ஏற்கனவே  செங்கல் கட்டுமானம், இரட்டைச் சுவர், விலங்குகளின் எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு  ஆய்வு நடைபெற்று வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இது  ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளதாகவும், அங்கு வசிக்கும் செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்துள்ளனர் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தேங்காய் ஓட்டுன் சுடுமண்ணால் ஆன முத்திரை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதை கண்டு தொல்லியில் ஆய்வாளர்கள் வியத்துள்ளது.

இதை, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.