ஊட்டி:

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் ஊட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இங்கு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை ஊட்டி நகருக்குள் எடுத்து வருவதை தடுக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.