டில்லி

ஜே இ இ முதல் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்வுகள் மே 24 ஆம் தேதியும் தொடங்க உள்ளன.

தேசிய தேர்வு முகமையான என் டி ஏ ஒவ்வொரு வருடமும் ஜே இ இ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை நடத்தி வருகின்றது.   இதன் தேர்வின் மூலம் தேசிய அளவிலான என் ஐ டி, ஐஐடி மற்றும் மத்திய அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஜே இ இ பிரதான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என என் டி ஏ அறிவித்திருந்தது.   அதன்படி நேற்று இந்த ஜே இ இ முதன்மை தேர்வுகள் நடைபெறும் தேதிகள் என் டி ஏ வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஜே இ இ பிரதான தேர்வுகளின் முதல் கட்ட தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.  மேலும் ஜே இ இ பிரதான தேர்வுகளின் இரண்டாம் கட்ட தேர்வுகள் வரும் மே மாதம் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.