ஃப்ரெண்ட்ஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் மைக்கேல் டைலர்.

உலகம் முழுவதும் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆங்கில தொலைக்காட்சி தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ள நிலையில், இந்தத் தொடரில் குந்தர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜேம்ஸ் மைக்கேல் டைலர்.

இவருக்கு 59 வயது ஆகும் நிலையில் இவர் தற்போது காலமாகியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த ஜேம்ஸ் மைக்கேல் டைலர் மரணம் அடைந்ததை அவரின் மேனேஜர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2018-ல் ஜேம்ஸ்க்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அது எலும்புக்கும் பரவியது.