பிரான்சில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாளும் புதுப்புது மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் சோர்வடைந்துள்ள மாணவர்களை இந்த புதிய கட்டுப்பாடுகள் மேலும் குழப்பமடைய செய்துள்ளதோடு அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாழாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உணவு விடுதிகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள தடுப்பூசி போட்டிருப்பதை கட்டாயமாக்கும் முயற்சியில் பிரெஞ்சு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இன்று பாரிஸ் நகரில் ஆர்பாட்டம் நடத்தினர்.

மாணவர்கள் மிகவும் சோர்வடைந்திருக்கும் நிலையில் விதிகளை அடிக்கடி மாற்றியமைப்பது சுகாதார நிலைமையை மேலும் மோசமடைய செய்யும் என்று ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குரலெழுப்பினர்.