குளிர்பதன வசதியுடனான ஜெயலலிதாவின் இறுதி பயணப்பெட்டி

Must read

சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பெட்டி,  சந்தனக்கட்டையால் செய்யப்பட்டது, வெளியே தங்க முலாம் பூசப்பட்டது.
இந்த பெட்டியானது பிரபல நிறுவனமான பிளையிங் ஸ்குவாட் அன்ட் ஹோமேஜ் என்ற நிறுவனத்தால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் இதற்கு முன்னர் பல விவிஐபிக்களுக்கு பிரத்யேகமாக செய்து கொடுத்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் மனோரமா ஆகியோருக்கும்  இந்தநிறுவனம்  தயார் செய்யப்பட்டி பெட்டிகளில்தான் உடல்  வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
untitled-24
இந்த பெட்டியின் விசேஷம் என்ன வென்றால்,  “குளிர்பதன வசதியுடன்,  சவப்பெட்டியின் வெளிப்புறம் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்”
இதுகுறித்து,  இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்  சாந்தகுமார் கூறியதாவது,
நாங்கள் தயார் செய்யும், இவ்வகை பெட்டிகளில் வைக்கப்படும் உடல், 0-5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருக்குமானால் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பாதுகாப்பாய் இருக்கும் என்றும், நாங்கள்தான் முதன் முதலாக  1994-ல் இவ்வகை சவப்பெட்டிகள் செய்யும் காப்புரிமை பெற்றதாக கூறினார்.
சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் உடல் , அனைவரும் பார்க்கும் வகையில் சற்றே முன்னோக்கி சாய்ந்த நிலையில் இருந்தது.
பார்வையாளர்களுக்கு , உடலானது சவப்பெட்டிக்குள் எடை தாங்காமல் விழுந்துவிடும் என பயத்தை கொடுத்தா லும், அவ்வாறு எதுவும் நிகழாமல் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது.
இதுவரை ஏறக்குறைய  500க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களின்  இறுதி யாத்திரைக்கான பெட்டிகள் செய்துள்ள தாகவும், முதன் பெட்டி மறைந்த அதிமுக அமைச்சர்   நெடுஞ்செழியனுக்காக தயாரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article