சென்னை:
“இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 456 பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கில் விபத்து ஏற்பட்ட, 48 மணி நேரத்துக்குத் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் வகையிலான, “இன்னுயிர் காப்போம்” என்ற திட்டத்தை, கடந்த சில நாள்களுக்கு முன்பு மேல்மருவத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இந்நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்ட நான்கு நாள்களுக்குள் 456 பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில், 372 பேருக்கு சிகிச்சையாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.31 லட்சத்து 67,050 செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, தனியார் மருத்துவமனைகளில், 84 பேருக்கு, ரூ.9.26 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.