சென்னை: பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்கு கண்ணாடி வழங்கப்படம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஓன்றரை வருடங்காக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டுக்ககான வகுப்புகள் குறித்த வீடியோ தொகுப்பை கல்வி டிவி மூலம் ஒளிபரப்பும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச புத்தகங்களையும் அவர் வழங்கினார்.
ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்கு கண்ணாடிகள் வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளது. மேலும் இதனை மாணவர்களை நேரடியாக பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.