மதுரை:
குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் (27ந்தேதி) விலையில்லா முகக் கவசம் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் வழங்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு  பல பகுதிகளில் மருத்துவ சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய அதிக அளவிலான  சிறப்பு முகாம்கள் நடததப்பட்ட வருகிறது. இதன்மூலம் கொரோனா பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பபட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்புக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதற்கான தடுப்பு மருந்து கிடைக்கும் வரை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே போக வேண்டும் , அப்போது கண்டிப்பாக சமூக விலகலுடன்  முகக் கவசம் அணிய வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கும் பணி தொடங்க உள்ளது. வரும்  திங்கள்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து ரேசன் கடைகளில் பொதுமக்கள் இலவசமாக முகக்கவசங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.