சென்னை:

கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு)  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக  சட்டமன்றத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், கட்டட தொழிலாளர்கள் வயிறாற பசியாறும் வகையில் விலையில்லா உணவு விரைவில் அம்மா உணவகங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டின் கூட்டத்தொடர் கடந்த 2ந்தேதி  ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொர்ந்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்ட நிலையில், தொடர்ந்து ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர்,  சென்னையில் கட்டட தொழிலில் ஈடுபடும் கட்டட தொழிலாளர்கள் வயிறாற உண்பதற்கு அம்மா உணவங்களில் விலையில்லா உணவு   வழங்கும் திட்டம் விரைவில் தமிழக அரசு தொடங்கும் என தெரிவித்தார்.