சென்னை: பொதுமக்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர்களுக்கு இலவச காபி திட்டத்தை அறிவித்துள்ளது மெட்ராஸ் காபி கவுஸ் நிறுவனம். இந்த இலவச காபி இன்று மாலை 5மணிக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, இன்று தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஊக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், மெட்ராஜ் காபி நிறுவனமும், வாக்காளர்கள், வாக்களித்துவிட்டு, அவர்களின் மை தடவிய நகத்தைக் காட்டினால், அவர்களுக்கு ஒரு இலவச ஃபில்டர் காபி இலவசமாக கிடைக்கும் என அறிவித்து உள்ளது.
மெட்ராஸ் காபி கவுஸ் நிறுவனத்துக்கு சென்னையில், பசுல்லா சாலை – தி.நகர், வடபழனி மெட்ரோ நிலையம், பாண்டி பஜார் – தி.நகர், விஆர் மால் – அண்ணாநகர், CMBT மெட்ரோ நிலையம், லதா சூப்பர் மார்க்கெட் எதிரில் உள்ள பள்ளிக்கரணை எம்.சி.எச் ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளது. இந்த கிளைகளுக்கு மாலை 5மணிக்கு பிறகு சென்று, வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்தற்கான நகக்குறியீட்டை காட்டி இலவச பில்டர் காபியை பெற்றுக்கொள்ளலாம்.
அனைவரும் வாக்களித்து நம் நாட்டின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!