சென்னை: பொங்கலுக்கு முன்பே 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதுவரை 1.2 கோடி பேர் ஆதார் எண் இணைத்து உள்ளனர் என அமைச்சர்  செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று  இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ஆதார் இணைப்பு மற்றும், இலவச மின்சார இணைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,  விவசாய பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில், தற்போது, 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டுவிடும். ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு பெற போகிறது என்றர்.

மேலும், மின்வாரிய எண்ணுடன் இதுவரை  இதுவரை 1.2 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்  என்று கூறியவர், அவர்களில்,  58 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாக ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறினார். மேலும், தமிழ்நாட்டில்,  மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

ஆதார் மின் இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் இருப்பதால் விரிவாக பேச விரும்பவில்லை என மறுத்தார். கரூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  அண்ணாமலை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை தான் வாங்கிய கைக் கடிகாரத்திற்கான ரசீதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேடு விதித்துள்ளார்.அண்ணாமலை வாங்கிய கைக் கடிகாரத்திற்கு ரசீது இருந்தால், வெளியிட வேண்டியதுதானே எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார்.