மக்களே உஷார்: இலவசஅழைப்பு 90 நாள் மட்டுமே ஜியோவுக்கு அனுமதி! டிராய் அதிரடி

Must read

டில்லி,
ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ‘ஜியோ’ மொபைன் சேவையின் இலவச அழைப்புக்கு வரும் டிசம்பர் 3ந்தேதி வரை  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அனுமதி அளித்து உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்பு சேவைக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் (டிராய்) அனுமதி அளித்துள்ளது.  வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை இலவச அழைப்பு சேவைக்கு டிராய் அனுமதி அளித்துள்ளது.
jio1
கடந்த செப்டம்பர் மாதம் 2ந்தேதி அன்று ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவையை அறிமுகம் செய்தார் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
அப்போது பேசிய முகேஷ் அம்பானி,  செப்டம்பர் 5-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ தனது முழு சேவையை தொடங்கும் என்றும்  டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாகும். அதன் பிறகு ஒரு ஜிபி டேட்டா ரூ.50க்கு வழங்கப்படும். தற்போது சந்தையில் ஒரு ஜிபி டேட்டா 250 ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து அழைப்புகள் மற்றும் ரோமிங் கட்டணங்கள் இலவசமாகும். . அனைத்து திட்டங்களிலும் அழைப்புகள் இலவசம் என்று அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து கடந்த மாதம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும் இலவச அழைப்பு களை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்தது.
இதன் காரணமாக மற்ற மொபைல் நெட்வொர்க்குகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.  ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்து,  பார்தி ஏர்டெல், வோட போன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரிலை யன்ஸ் ஜியோ கட்டண விதிகளை மீறுவதாக டிராய் அமைப்பிடம் புகார் செய்தது.
இந்த புகாரை ஆய்வுசெய்த டிராய், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினுடைய இலவச சலுகைக்கு 90 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று கூறியுள்ளது.
மேலும்,  ரிலையன்ஸ் ஜியோ டிராய் அமைப்பிடம் தாக்கல் செய்த கட்டண திட்டத்தில் வாழ்நாள் முழுதும் இலவச அழைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்க வில்லை.
கட்டண திட்டத்தில் ஒரு விநாடிக்கு 2 பைசா என்று குறிப்பிட்டிருக்கிறது. விளம்பரப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த இலவச அழைப்புகளை அணுகமுடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிராய் அனுமதி வழங்கியதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வரவேற்றுள்ளது.
மேலும் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாக சிம்கார்டு வாங்கியவர்கள், இலவச அழைப்புகள் மற்றும் இண்டர்நெட் இணைப்பு சேவையை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
4ஜி நெட்வொர்க்கில் ரிலையன்ஸ் ஜியோ இணையத்தின் வேகம் குறைவாக உள்ளது என்று டிராய் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
டிராய் அமைப்பு தகவலின்படி ஏர்டெல் நிறுவனம்தான் இணைய வேகத்தில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இதனுடைய பதிவிறக்க வேகம் 11.4 எம்பிபிஎஸ்.
இரண்டாம் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் 7.9 எம்பிபிஎஸ். 7.6 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன்,
ஐடியா மூன்றாவது இடத்திலும் 7.3 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் , நான்காவது இடத்தில் வோடபோன் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பதிவிறக்க வேகம் 6.3 எம்பிபிஎஸ்.
பதிவேற்ற வேகத்தில் 2.4 எம்பிபிஎஸ் வேகத்துடன் ரிலை யன்ஸ் ஜியோ நான்காவது இடத் தில் உள்ளது. பதிவேற்ற வேகத்தில் ஐடியா நிறுவனம் (4.1 எம்பிபிஎஸ்) முதலிடத்தில் உள்ளது. 4.0 எம்பி பிஎஸ் பதிவேற்ற வேகத்துடன் வோடபோன் இரண்டாவது இடத்தி லும் 3.7 எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
2.1 எம்பிபிஎஸ் வேகத் துடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுவரவான ரிலையன்ஸ் இணைப்பில் சேருவது தொடர்பான நுகர்வோரின் பிரச்சினைகளை  நிராகரித்ததால் பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா மீது 3,050 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிராய் தெரிவித்து உள்ளது.
ஏர்டெல், வோடபோன் தலா 1050 கோடியும், ஐடி 950 கோடியும் அபராதம் செலுத்தவும் டிராய் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நுகர்வோர் சிரமத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், “பொது நலனுக்கு எதிராக”. செயல்பட்டால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் டிராய் எச்சரிக்கை செய்துள்ளது.
 
 
 
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article