சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து முதவ்லர் ஸ்டாலின் தலைமையிலான  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணை யில்,  கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது:

“உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் 4கோடியே 76லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்”

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி அளித்து,ரூ.4,76,23,000 நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.