டொராண்டோ:  ஆழமான வெளியிலிருந்து ரேடியோ சிக்னல் ஒன்றைக் கண்டுபிடித்த்தாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (எஃப்.ஆர்.பி) என்றழைக்கப்படும் இது, ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் அனுப்புகிறது என்று தெரிய வருகிறது.

முதல் நான்கு நாட்களுக்கு வந்து சேரும் அலை வெடிப்புகள் அதற்குப் பிறகு 12 நாட்களுக்கு வருவதில்லை, பின்னர் மீண்டும் அதே சுழற்சி முறையைத் தொடர்கிறது.

டொராண்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி டோங்ஸி லி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு எஃப்.ஆர்.பி யின் தனித்துவமான மற்றும் தொடர்ச்சியான முறையைக் கண்டறிந்தது. இது குறித்து முன்கூட்டியே வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு செப்டம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019க்கும் இடையில் இம்மாதிரியான 28 வெவ்வேறு வடிவங்கள் காணப்பட்டதாகக் காட்டுகிறது. இம்முறை ஒரு கால இடைவெளி கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் கென்சி நிம்மோ, “இந்த அலை வெடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் முன்னர் அமைக்கப்பட்ட எஃப்.ஆர்.பி களில் இருந்து வேறுபட்டது“, என்று கூறினார்.

எஃப்.ஆர்.பி பூமியிலிருந்து 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள SDSS J015800.28 + 654253.0 என்ற விண்மீன் மண்டலத்தைக் கண்டறிந்துள்ளது. தூரம் இருந்தபோதிலும், இது இதுவரை கண்டறியப்பட்ட மிக நெருக்கமான எஃப்.ஆர்.பி ஆகும் என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

எஃப்.ஆர்.பி ஒரு சிறிய பொருளைச் சுற்றி வருவதாக ஊகிக்கப்படுகிறது, இதன் விளைவாக அதன் முறை மீண்டும் நிகழ்கிறது. இந்த முறைக்கான காரணம் தெரியவில்லை