சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன முறையில் மோசடி செய்துவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து காவல்துறையில் மேயர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி மேயராக இருப்பவர் பிரியா ராஜன். இவர் சென்னை நகரின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வுகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து 3 பேரிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் சென்னை மேயர் தரப்புக்கு தகவல் வெளியானது.

இதுகுறித்து சென்னை மேயர் பிரியா சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.  புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.