துரைமுருகன் - கதிர் ஆனந்த்
துரைமுருகன் – கதிர் ஆனந்த்
முன்னாள் அமைச்சர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் மீது வேலூர் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளருமான கதிர் ஆனந்த், காட்பாடி அருகே கிஸ்ஸ்டன் என்ற பெயரில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார்.
இவர் மீது 5 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக வேலூர் ஜி.ஆர். பாளையத்தைச் சேர்ந்த  பிரகாசம் என்பவரது மகன் முத்துக்குமார் வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
1
அந்த புகார் மனுவில் முத்துக்குமார்  கூறியிருப்பதாவது:
“தி.மு.க. பிரமுகர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்  காட்பாடி அருகே நடத்திவரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தேன்.  மேனேஜ்மெண்ட் கோட்டாவில் தான் இடம் தர முடியும் என்ற கதிர் ஆனந்த், அதற்காக டொனேசன் உட்பட 5,20,000 ரூபாய் பெற்றுக்கொண்டார் இதற்கான ரசீது எதுவும் தரவில்லை.
இதையடுத்து நான் கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென, “நீ பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கிறாய். ஆகவே இன்ஜினியரிங் படிக்க முடியாது” என்று கூறி கல்லூரியை விட்டு அனுப்பி விட்டனர்.
d712d8c3-13bc-4421-8196-faebc78524b8நான் கல்லூரியில் சேரும்போதே எனது மதிப்பெண் சான்றிதழ், டி.சி. உட்பட அனைத்து ஆவனங்களையும் அளித்துள்ளேன். எனக்கு தகுதி இல்லை என்றால் முன்பே தெரியாதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
நான் தந்த 5 லட்சத்து இருபதாயிரம் ரூபாயை திருப்பித்தரும்படி கேட்டதபோது பல முறை அலையவிட்டார்களே தவிர பணத்தை தரவில்லை. ஆகவே  கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், எனது பணத்தை பெற்றுத்தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது புகார் மனுவில் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.