அதானி நிறுவனத்தில் 43500 கோடி முதலீடு செய்துள்ள மூன்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்கு முடக்கம்

Must read

 

மொரீசியஸ் நாட்டில் இருந்து செயல்படும் மூன்று முதலீட்டு நிறுவனங்களின் கணக்கை முடக்க தேசிய பத்திரம் மற்றும் நிதித்துறை பங்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அலுப்புல இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏ.பி.எம்.எஸ். இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய மூன்று முதலீட்டு நிறுவனங்கள் மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் அதானிக்கு சொந்தமான அதானி என்டர்ப்ரைசஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி க்ரீன் ஆகிய நிறுவனங்களில் முறையே 6.82, 8.03, 5.92 மற்றும் 3.58 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது, இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 43,500 கோடி.

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் அடிப்படையில் இந்த பங்குகளை வாங்குவதற்கு தேவையான பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த விவரங்களை இந்திய பங்கு சந்தை ஆணையம் கேட்டிருந்தது.

ஆணையம் வழங்கிய காலக்கெடுவையும் தாண்டி இதற்கான விளக்கம் தராததால் இந்த மூன்று முதலீட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்கு முதலீட்டு (FPI) நிறுவனங்களுக்கான கணக்கை முடக்கி வைத்துள்ளது.

மே மாதம் 31 தேதி இந்த கணக்குகளை முடக்கி வைத்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதனால் புதிய பங்குகளை வாங்கவோ அல்லது வாங்கிய பங்குகளை விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article