சென்னை

மிழக முதல்வர் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1600 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இந்த நிறுவனம் தைவான் நாட்டின் முன்னணி எலக்டிரானிக்ஸ் நிறுவனம் ஆகும்.   இந்த நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடி முதலீட்டில் செல்போன் உதிரிபாக தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு,

”நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சந்தித்து, தமிழகத்தில் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்து பேசினார்.

அப்போது தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சைய் சியாங், பொதுமேலாளர் பாப் சென், தலைமை அலுவலக இயக்குநர் செந்தில்குமார், இந்தியப் பிரதிநிதி லீ, இணை மேலாளர் ஹன்னா வேங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1600 கோடி முதலீடு செய்து செல்போன் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது”

என்று அறிவித்துள்ளது.