சென்னை

ர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 92 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கின்றன.

ஒரு சில மாதங்களில் இரண்டு அல்லது மூன்று முறை கூட எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது.  சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் ரூ.1944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது,. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 92.50 ரூபாய் குறைந்துள்ளது.  இதன் மூலம் சிலிண்டர் 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.