அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை தனது அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது.

முழுமையாக கட்டிமுடிக்கப்படாத இந்த கோயில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக திறக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி இந்த விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆதி சங்கரர் தோற்றுவித்த நான்கு மடங்களின் மடாதிபதிகளும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

ஒரிசா மாநிலம் பூரி சங்கராச்சியார் நிச்சலானந்த சரஸ்வதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு தான் அயோத்தி சொல்லப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ் மடத்தின் மடாதிபதி அவிமுக்தேஸ்வரானந்தா சங்கராச்சாரியார் முழுமை பெறாத கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது சனாதன தர்மத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்துக்கு விரோதமான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீட மடாதிபதியும், குஜராத் மாநிலம் துவாரகா சாரதா பீட மடாதிபதியும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தபோதும் இந்த தகவலை சிருங்கேரி மற்றும் துவாரகா பீடங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அடுத்து சரயு நதியில் 251 அடி உயரத்தில் ராமருக்கு மற்றொரு சிலை…