ராமருக்கு 251 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிலை அமைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

51 அடி உயரத்தில் குழந்தை வடிவத்தில் செய்யப்பட்ட ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது.

பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ள இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரை அல்லது பார் மஞ்சா காட் பகுதியில் ராமருக்கு மற்றொரு சிலை வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல சிற்பி நரேஷ் குமாவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ராமருக்கு 251 அடியில் உலகின் மிக உயரமான சிலை வைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் யோசித்து வருவதாகவும் அவரது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் ராமர் சிலையை வடிவமைக்க உள்ளதாகவும் கூறினார்.

இந்த சிலை சரயு நதிக்கரையில் நிறுவ ஆலோசிக்கப்பட்டதாகவும் பின்னர் அதனை பார் மஞ்சா காட் பகுதியில் நிறுவ உத்தேசித்துள்ளதாகவும் கூறிய நரேஷ் குமாவத், விரைவில் இந்த சிலை வடிவைமைக்கும் பணியை துவக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் 230 க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவின் தேசிய தலைவர்களின் சிலைகளைகள் மற்றும் ராமர், கிருஷ்ணர், புத்தர் உள்ளிட்ட கடவுள் சிலைகளை சிற்பி நரேஷ் குமாவத் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோயில் கும்பாபிஷேகம்… ஜனவரி 22 மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்… மதுக்கடைகளை மூட சத்தீஸ்கர் அரசு உத்தரவு…