ரன்பூர்

பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங் ராஜஸ்தான் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இக்குள்ள 200 தொகுதிகளில், கரன்பூர் தொகுதி வேட்பாளர் குர்மீத் சிங் கூனரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அப்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் பாஜக 115 தொகுதிகளிலு, காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பான்மைய்டன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வராக பஜன்லால் ஷர்மா பொறுப்பேற்றார்.

நவம்பர் 25 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறாத கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ருபிந்தர் சிங் கூனரும், பாஜக சார்பில் அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கும் போட்டி இட்டனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குர்மீத் சிங் மகன் காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனரின்  மகன் என்பது குறிப்பிடட்தககதாஉம். கடந்த 5ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.  இன்று, கான்பூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தம் பதிவான வாக்குகளில் ருபிந்தர் சிங் கூனருக்கு 94,950 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கிற்கு 83,667 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் தோற்கடித்துள்ளார்.