திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி காரோடு அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் குடும்பத்தை நான்கு பேர் பலியாகி யுள்ளனர். அவர்களின் சடலங்களை திருப்பத்தூர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, சத்தீஸ்கரின் பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டது. இந்த கனமழை காரணமாக, பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. அந்த பகுதி சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
அந்த சமயத்தில், அங்கு வந்த கார் ஒன்று, வெள்ளத்தில் மூழ்கிய சாலை வழியாக பாலத்தை கடந்துசெல்ல முயற்சித்தது. அப்போது, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில், அந்த கார் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருந்த நிலையில், அவர்களும் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், அந்த காரை மீட்டனர். மீட்கப்பட்ட காரில், கணவன், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இறந்த நிலையில், காணப்பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது. இறந்தவர்கள் பெயர் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா(40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ராஜேஷ்குமார், தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர் அங்கு கட்டட பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். ராய்ப்பூரில் ஒரு பிரபல கட்டிட நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். அவர் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வரும் நிலையில், அருகே உள்ள பஸ்தாருக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். இவர்கள் அருகே உள்ள பகுதிகளை சுற்றி பார்த்த நிலையில், மழையின்போது, அந்த பகுதியில் உள்ள கால்வாயை கடக்க முயன்றபோது அவர்களது காரை வெள்ளம் இழுத்துச்சென்றது. அன்று மாலையில் கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் காருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 4 பேரும் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 4 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர்கள், திருப்பதி கோயிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக புதன்கிழமை சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு அதில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பாரண்டப்பள்ளி கிராமத்துக்கு எடுத்து வரும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]