புதுடெல்லி: குடித்துவிட்டு பணிக்கு வந்த ஒரு தனியார் விமான நிறுவன விமானியும், ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானியும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

air_india

ஜெட் ஏர்வேஸின் பாரீஸ் – மும்பை விமானத்தை இயக்க வேண்டிய அந்த விமானி முதல் தடவை இக்குற்றத்தை செய்ததால் 3 மாதங்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காமிலிருந்து புதுடெல்லிக்கு வர வேண்டிய ஏர்-இந்தியா விமானத்தை இயக்க வேண்டிய அந்த விமானிக்கு இது இரண்டாவது முறையாதலால் அவர் மூன்று ஆண்டுகள் சஸ்பண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சஸ்பண்ட் செய்யப்பட்ட காலத்தில் அவர்கள் இருவரது லைசன்சுகளும் முடக்கி வைக்கப்படும்.
குடித்துவிட்டு பனிக்கு வரும் விமானிகள் ஜெட் ஏர்வேஸில்தான் அதிகமாம். இதுவரை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டுவரை 38 பயணிகள் மீது அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்திய விமானங்களில் கெடுபிடிகள் அதிகம். ஒரு விமானி ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறும்போதும், திரும்பி வரும்போது இந்த சோதனைக்கு உட்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானங்களில் ஒரு விமானி முதல் முறை குடித்தது கண்டறியப்பட்டால் அவருக்கு 3 மாத தற்காலிக பணி நீக்கமும், இரண்டாவது முறை மூன்றாண்டுகால பணி தற்காலிக நீக்கமும், மூன்றாவது முறை நிரந்தர பணி நீக்கமும் செய்யப்படுவார் என்று தெரிகிறது.